விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

காரட் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அறிவுரை

நீலகிரி மாவட்டத்தில் நீர்போகம் காலத்தில் காரட் பயிரிடும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஊட்டி உழவர் பயிற்சி நிலைய தோட்டக்கலை உதவி இயக்குநர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் நீர்போகத்தில் காரட் பயிரிட, நிலத்தை தயார் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 12 டன் தொழு உரத்தை இட்டு தயார் செய்து, 15 செ.மீ., உயரம், ஒரு மீட்டர் அகலம் உள்ள மேட்டுபாத்திகள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு 54:54:54 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துகள், 10 கிலோ துத்தநாக சல்பேட் அடி உரமாக இட வேண்டும். 5 கிலோ அசோஸ்பைரில்லம் 5 கிலோ பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை, 25 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.ஏக்கருக்கு 1.6 கிலோ காரட் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை 15 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும்; 14 கிலோ கார்போபியுரான் குருணை மருந்தை, நூர்புழு தாக்குதல் உள்ள நிலத்துக்கு இட வேண்டும். மேலும், நூர்புழுவை கட்டுபடுத்த ஒரு ஏக்கருக்கு 400 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடலாம். விதைத்த 15 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். 45வது நாளில் செடிகளை 15 செ.மீ., இடைவெளியில் களைந்து விட வேண்டும். 60வது நாளில் மண் அணைக்க வேண்டும். பின் அதே நாளில், 18:18:18 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை மேலுரமாக இட வேண்டும். களைகளை கட்டுபடுத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 2.5 மில்லி ஸ்டாம்ப் அல்லது 4 மில்லி புளூ குளோரிலின் கலந்து விதைத்தவுடன் தெளிக்க வேண்டும். வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறலாம்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...