விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நெல்பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

மதுரை: வாடிப்பட்டிவட்டாரத்தில் சாகுபடி செய்யப் பட்டுள்ள நெல் பயிர் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. இதில் இலைச் சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தாக்குதல் காணப்படும் இடங்களில் குறைவான அளவு தழைச்சத்து உரங்களை இரண்டு, மூன்று முறையாக பிரித்து இடவேண்டும். பயிர் பாதுகாப்பாக இருக்க, ஏக்கருக்கு 400 மி.லி., மானோகுரோட்டோபாஸ் மருந்தை கைத்தெளிப்பான் மூலம் இலைகள் நன்கு நனையும்படி காலை, மாலையில் வெயில் குறைவான நேரங்களில் தெளிக்க வேண்டும்.கதிர்பருவத்தில் உள்ள நெற்பயிர்களில், கதிர்நாவாய் பூச்சிக்கு பயிர்பாதுகாப்பாக ஏக்கருக்கு பத்து கிலோ மாலத்தியான், 5 சதவீத பவுடரை மணலுடன் கலந்து காலையில் பனிப்பதத்தில் தூவ வேண்டும். அல்லது மாலத்தியான் ஒரு ஏக்கருக்கு 400 மி.லி., மருந்தை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பயிர் பாதுகாப்பு தொடர் பான சந்தேகங்களுக்கு வாடிப்பட்டி விவசாய அலுவலர்கள் குணசேகரன், அம்பிகாபதியை அணுகி தெரிந்து கொள்ளலாம் என உதவி இயக்குனர் ராமநாதன் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...