நிலக்கடலை மகசூல் அதிகரிக்க யோசனை விவசாயிகள் பயன்பெற அதிகாரி அழைப்பு
முற்பகல் 8:10 நிலக்கடலை மகசூல் அதிகரிக்க யோசனை விவசாயிகள் பயன்பெற அதிகாரி அழைப்பு 0 கருத்துகள் Admin
ஒரு ஹெக்டேர் நிலக்கடலை பயிருக்கு ஊட்டச்சத்து தெளிக்க 2.50 கிலோ டி.ஏ.பி., எனப்படும். டை-அமோனியம் பாஸ்பேட், ஒரு கிலோ அமோனியம் சல்பேட் மற்றும் 0.50 கிலோ போராக்ஸ் தேவையாகும். இந்த மூன்று வகையான உரங்களை 37 லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கி ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். தொடர்ந்து 12 மணி நேரம் ஊறிய கலவையை வடிகட்டி ஊட்டச்சத்து கலவையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
37 லிட்டர் கலவையை வடிகட்டிய பின் 32 லிட்டர் ஊட்டச்சத்து கிடைக்கும். 32 லிட்டர் ஊட்டச்சத்தினை 468 லிட்டர் தண்ணீரில் கலக்கி 500 லிட்டர் கலவையாக உருவாக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலக்கடலை பயிருக்கு தெளிக்கலாம். இதே கலவையில் 375 மில்லி பிளோனோபிக்ஸ் பயிர் ஊக்கியை கலந்து நிலக்கடலை விதைத்த 25ம் நாளில் தெளிக்க வேண்டும்.
இதேபோல கலவையை மறுமுறையும் தயார் செய்து பத்து நாள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். இவ்வாறு நிலக்கடலை பயிருக்கு கூட்டு ஊட்டச்சத்து அளிப்பதால் பருப்பு நன்கு உருவாகி விலைச்சல் கூடுதலாக இருக்கும்.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இரண்டு முறை கூட்டு ஊட்டச்சத்து தெளிக்க ஒரு ஹெக்டேருக்கு ஐந்து கிலோ டி.ஏ.பி., இரண்டு கிலோ அம்மோனியம் சல்பேட் மற்றும் ஒரு கிலோ போராக்ஸ் ஆகிய உரங்கள் 50 சதவிகித மான்யத்தில் தா.பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கிறது. நிலக்கடலை விதைத்த விவசாயிகள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் பட்டா அல்லது சிட்டா நகலுடன் தா.பேட்டை வட்டார விரிவாக்க அலுவலர்களை அணுகலாம்.
மேலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஜிப்சம் ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ என்ற அளவில் 50 சதவிகித மான்யத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. நிலக்கடலை விதைத்த 45ம் நாள் இரண்டாம் களையெடுப்பின் போது ஜிப்சத்தை செடியின் அருகில் இட்டு மண் அனைத்து பயிருக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து மகசூலை அதிகரிக்கலாம். ஜிப்சம் தேவைப்படும் விவசாயிகள் தா.பேட்டை வேளாண் உதவி இயக்குனரை நேரில் சந்தித்து பயன்பெறலாம்.

குறிச்சொற்கள்: நிலக்கடலை மகசூல் அதிகரிக்க யோசனை விவசாயிகள் பயன்பெற அதிகாரி அழைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...