விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

வீணாகும் பயிர்கழிவுகளில் இருந்து கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம் வேளாண்மை அலுவலர் தகவல்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி வட்டாரத்தில் தற்சமயம் மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி போன்ற பயிர்களின் அறுவடை நடந்து வருகிறது.

தானியங்களை நீக்கிய பின் கிடைக்கும் பயிர்கழிவுகளை விவசாயிகள் ரோடு ஓரங்களிலும், களங்களிலும் தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் அருகில் உள்ள மரங்கள் தீக்கிரையாகி தீ விபத்தை ஏற்படுத்துகிறது.

இதனை தவிர்க்க வீணாகிப் போகும் இத்தகைய பயிர்க்கழிவுகளையும், சக்கைகளையும் பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரித்து சுற்றுப்புறத்தை பாதுகாப்பதுடன் நாமும் செலவில்லாமல் இயற்கை உரம் தயாரிக்கலாம்.

கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் முறை:-

நேரடியாக வெயில் படாத இடங்களில் 2 மீட்டர் நீளம், 1.5 மீ. அகலம், 1 மீட்டர் ஆழமான குழி தோண்டி துண்டாக்கப்பட்ட பயிர் கழிவுகளை 15 செ.மீ. உயரம் வரை இட்டு நன்கு நனையும் படி தண்ணீர் தெளிக்க வேண்டும். பின் 30 கிலோ சாணத்தையும், 5 கிலோ கரம்பையையும் நீரில் கரைத்து நன்கு தெளிக்க வேண்டும்.

அதன் மேல் 1 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 1 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவையும் சீராக தூவினால் முதல் அடுக்கு தயாராகி விடும். இதே முறைப்படி 10 அடுக்குகள் இட்டு குழியில் 1 மீட்டர் உயரம் வரும் வரை தயாரிக்க வேண்டும். மேல் பகுதியை மண்ணால் காற்றுப்புகாதவாறு மூடிவிட வேண்டும்.

அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதத்தில் நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் தயாராகி விடும். இதன் மூலம் நல்ல தரமான இயற்கை உரத்தை பெறலாம். இவ்வகை இயற்கை உரங்கள் மூலம் மண் வளத்தை பெருக்குவதுடன் அதிக செலவாகும் ரசாயன உரத் தேவையை குறைத்து அதிகலாபம் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...