விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

காய்கறி, பயறு வகை செடிகளில் மாவு பூச்சி: கட்டுப்படுத்த ஆலோசனைகாய்கறி, பயறுவகைகளில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த சிவகங்கை உழவர் பயிற்சி நிலைய உதவி இயக்குனர் லயோலா அன்புக்கரசி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவரது அறிக்கை: கத்தரி, வெண்டை, தக்காளி, துவரை, உளுந்து போன்ற பயறு வகையில் மாவு பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளது. பூச்சியின் உடம்பின் மேல் காணப்படும் மாவு போன்ற படலம் இருப்பதால் பூச்சி மருந்து அதை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. குறுகிய காலத்தில் அதிகளவில் இனப்பெருக்கம் செய்வதால் சேதமும் ஏற்படுத்துகிறது. செடியின் நுனிக்குருத்து மற்றும் பூக்காம்புகளில் தாக்குதல் அதிகம் இருக்கும். இதனால் இலை சுருங்கி மஞ்சள் நிறமாகி உதிரும். பூ, பிஞ்சு உதிர்ந்து மகசூலும் குறையும்.
கட்டுப்படுத்தும் முறை: களைகளை நீக்கி சுத்தமாக வைக்கவேண்டும், தாக்கிய பகுதியை எரித்து விடவேண்டும்.
வேப்ப எண்ணெய் இரண்டு சதவீத கரைசல் அல்லது வேப்ப விதை கரைசல் 5 சதவீதம் தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் கரைசல் தயாரிப்பில் காதிசோப் கரைசல் கண்டிப்பாக சேர்க்கவும். தாக்குதல் அதிகம் இருந்தால் பயிரில் புரோபோனோபாஸ் அல்லது குளோபைரிபாஸ் 2 மில் லியை ஒரு லிட்டர் தண்ணீரிலும், அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் இமிடாகுளோபிரிட் 0.6 மில்லி கலந்து தெளிக்கலாம் என தெரிவித்துள்ளார்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...