விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

வாழையில் கூன்வண்டு தாக்குதல்கட்டுப்படுத்த ஆலோசனைவாழையில் கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பல்லடம் தோட்டக்கலைத்துறையினர் தொழில்நுட்ப ஆலோசனை தெரிவித்துள்ளனர்.பல்லடம், சித்தம்பலம், நடுவேலம்பாளையம், பச்சார்பாளையம், சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், மங்கலம்ரோடு, பெத்தாம்பூச்சிபாளையம், வாழைத்தோட்டம் அய்யன்கோவில், கரைப்புதூர், காரணம்பேட்டை உட்பட பல இடங்களில் வாழை சாகுபடி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேந்திரம், கதளி ரகவாழைகள் மிக அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதுதவிர, இலைகளுக்காக மட்டுமே இலைவாழையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.வாழையில் கூன்வண்டு தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் பலமுறைபாதிப்பை சந்தித்தனர். கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த பல்லடம் தோட்டக்கலைத்துறையினர் வழங்கியுள்ள தொழில்நுட்ப ஆலோசனை:வாழையில் கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த அவ்வப்பொழுது காய்ந்த இலைகளை அகற்றிவிடவேண்டும். ஒவ்வொரு மாதமும் பக்க கன்றுகளை அகற்றவேண்டும்.மோனாகுரோட்டாபாஸ் மருந்தை ஒரு மில்லிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 50மில்லி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை 350மில்லி தண்ணீரில் கலந்து ஒரு மாதத்திற்கு நான்கு மில்லி மருந்து கரைசலை, தலா இரண்டு மில்லி வீதம் தண்டுப்பகுதியில் 45 செ.மீ.மற்றும் 150 செ.மீ. <உயரத்தில் தண்டுக்குள் செலுத்தவேண்டும். கூன்வண்டு தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி எடுத்து அழிப்பதன் மூலம் வண்டு பரவுதலை தவிர்க்க முடியும்.இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...