புரோடீனியா புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை
பிற்பகல் 6:58 புரோடீனியா புழு தாக்குதல் 0 கருத்துகள் Admin
புழுக்கள் சிறிது வளர்ச்சி அடைந்ததும் வயல் முழுவதும் ஊர்ந்து சென்று செடிகளின் இலைகளில் நடுப்பகுதியில் உண்ணும். பாதிக்கப்பட்ட இலைகளின் நடுவில் ஓட்டைகள் காணப்படும். புழுக்கள் இரவு நேரத்தில் உண்ணும் தன்மை உடையதால் பகல் நேரங்களில் புழுக்களை காண இயலாது. பகலில் வயல் இடுக்குகளில் பதுங்கி இருக்கும் இப்புழுக்கள் தோலுரித்து மேலும் வளர்ச்சியடைந்து கரும் பழுப்பு நிறம் அடைந்து செடிகளின் இலைகள், பூக்கள், காய்கள் போன்றவற்றை வேகமாக சாப்பிடும். செடிகள் முழுவதையும் உண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.இலைகளின் அடிப்பகுதியில் உள்ள முட்டைக்குவியல்கள் மற்றும் இளம் புழுக்களை இலையுடன் எடுத்து அழிக்க வேண்டும். வளர்ந்த புழுக்களை கையால் பொறுக்கி அழிக்க வேண்டும். புழுக்களை கட்டுப்படுத்த என்.பி.வி. என்ற நச்சுயிரியை ஒரு ஏக்கருக்கு 100 எல்.இ. என்ற அளவில் ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை கலந்து 200 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: புரோடீனியா புழு தாக்குதல்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...