விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

இலைவழி கலப்பு உரம் பயன்படுத்த வேளாண் அதிகாரி யோசனை


"மன்னார்குடி மற்றும் கோட்டூர் யூனியன் பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் தரிசில் உளுந்து மற்றும் பயறு சாகுபடி செய்துள்ள இடங்களில் அதிக மகசூல் பெற இலை வழி டி.ஏ.பி., தெளிக்க வேண்டும்' என வேளாண் உதவி இயக்குனர் மயில்வாகணன் யோசனை தெரிவித்துள்ளார். நெல் தரிசில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு சங்கு கட்டும் தருணத்தில் இலைவழி டி.ஏ.பி., கரைசல் தெளிப்பது அவசியம். பயறு வகைகளுக்கு அடியுரம் இடுவதில்லை. எனவே, தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களை இலை வழியாக தருவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். ஓர் ஏக்கருக்கு நான்கு கிலோ டி.ஏ.பி., தேவைப்படும். ஒரு பிளாஸ்டிக் வாளியில் பத்து லிட்டர் நீரை எடுத்து அதில் நான்கு கிலோ டி.ஏ.பி., இட்டு கரைத்து, முதல் நாள் மாலையில் இருந்து நன்கு ஊர விட வேண்டும். மறுநாள் பிற்பகலில் ஊறவைத்த கரைசலின் மேலாக உள்ள தெளிந்த நீரை மட்டும் தனியே பிரித்து எடுக்க வேண்டும்.வாளியின் அடியில் தங்கும் திடப்பொருட்களை கொட்டிவிட வேண்டும். தெளிந்த நீரை 190 லிட்டர் நீரில் கலந்து முதல்முறை சங்கு கட்டும் தருணத்திலும், மீண்டும் 15 நாட்களுக்குப்பின் இரண்டாம் முறையும் தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் மற்றும் காய்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிக்கும், என தெரிவித்துள்ளார்.


குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...