விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

செம்மை நெல் சாகுபடி முறையில்கூடுதல் மகசூலுக்கு ஆலோசனை


செம்மை நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் எடுக்க வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.இம்முறையில் சாகுபடி செய்ய வேளாண் துறையின் ஒருங்கிணைந்த தானிய உற்பத்தி திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஆத்மா போன்ற திட்டங்கள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. மானியமாக நெல்விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகளை எடுக்க உருள்களை கரவி, நடவு செய்ய நடவு குறியீடு கருவி, விதை நேர்த்தி மருந்துகள் மற்றும் காம்பளக்ஸ் உரம், டிஏபி உரமும் வழங்கப்படுகிறது. செய்யாறு வட்டத்தில் 250 ஏக்கரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இம்முறையில் பயிர் செய்வதால் ஏக்கருக்கு ஆகும் செலவில் ரூ.5 ஆயிரம் வரை குறைகிறது. ஏக்கருக்கு 7 மெ.டன் நெல் கிடைக்கும். இம்முறை சாகுபடியின் முக்கிய அம்சங்களாக ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது,

நாற்றங்கால் பரப்பு ஒரு சென்ட, நாற்றின் வயது 14 நாட்கள், நடவு செய்யும் இடைவெளி முக்கால் அடிக்கு முக்கால் அடி, நடவு முறை ஒரு குத்துக்கு ஒரு நாற்று சதுர நடவுமுறை, நீர் மேலாண்மை காய்ச்சலும் பாய்ச்சலும் 2.5 செ.மீ., நீர்கட்டிய பன் உலரும் நிலையில் மறுநீர் கட்டுதல், களை மேலாண்மை உருள்களை கருவி மூலம் (கோனோ வீடர்) களைகளை அமுக்கி, சேற்றை கலக்கி விடுதல், உர நிர்வாகம் மண் ஆய்வு அடிப்படையிலும் இலை வண்ண அட்டை மூலமும் தேவையறிந்து உரம் இடுதல் இவ்வாறு சாகுபடி செய்வதால் செடிக்கு செடி அதிக தூர்களும், கதிரும் பிடித்து 7 மெ.டன்னுக்கு குறையாமல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேளாண் உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...