விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி செய்து அதிக பயன்பெறலாம்: விழுப்புரம் கலெக்டர் வேண்டுகோள்உளுந்தூர்பேட்டை: விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி செய்து அதிக பயன்பெறவேண் டும் கலெக்டர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். உளுந்தூர்பேட்டை அடுத்த நாச்சியார் பேட் டையில் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் மண்ணாங்கட்டி வரவேற்றார். திருநாவுக்கரசு எம்.எல்.ஏ., முன் னிலை வகித்தார். திருக் கோவிலூர் ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், துணை கலெக்டர் சேஷாத்திரி, தனி தாசில் தார் வேலாயுதம் பிள்ளை, துணை தாசில்தார் பொன் னுசாமி, பி.டி.ஓ., கணேசன், வருவாய் அலுவலர் சற்குணன், தி.மு.க., ஒன் றிய செயலாளர் வசந்தவேல் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வீட்டுமனை பட்டா 56 பேருக் கும், முதியோர் உதவித் தொகை உத்தரவு 25 பேருக் கும், வேளாண்மை துறை சார்பில் விசைத்தெளிப் பான் 9 பேருக்கும், ஆதி திராவிட நலத்துறை சார் பில் ஒரு தையல் இயந்திரத் தையும் கலெக்டர் பழனிசாமி வழங்கினார், பொதுமக்களிடமிருந்து 404 மனுக் கள் பெறப்பட்டது. தாசில் தார் சிவஞானம் நன்றி கூறினார். முகாமில் கலெக்டர் பழனிசாமி பேசியதாவது:பொதுமக்கள் எந்தவித செலவும் இல்லாமல் விழுப் புரம் கலெக்டர் அலுவகத்தில் 1070 என்ற தொலைபேசி எண்ணிற்கு ங்களது குறைகளை தெரிவித்தால் 10 தினங்களுக் குள் நடவடிக்கை எடுக்கப் படும். 10 தினங்கள் கழித்து மீண்டும் பேசினால் எடுக் கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். தமிழக அரசு செயல் படுத்தியுள்ள நலத்திட் டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன் படுத்திக் கொள் ளவேண் டும். விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி செய்து அதிக பயன்பெற வேண் டும். கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் பெற் றோர்கள் பள் ளிக்கு அனுப்பவேண்டும் என கலெக்டர் பழனிசாமி பேசினார்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...