விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

இலை வெட்டும் புழுக்களை அழிக்க யோசனை



இலை வெட்டும் புழுக்களை அழிக்க குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் தெளிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தென்திருப்பேரை வட்டாரம் அங்கமங்கலம், புறையூர் பகுதிகளில் பிசான சாகுபடி செய்யும் நெல்பயிர்களில் இலையை வெட்டி சேதப்படுத்தும் பச்சை மற்றும் பழுப்பு நிற இலை வெட்டும் புழுக்கள் காணப்படுகின்றது. இந்தப் புழுக்கள் பயிரினை வெட்டி சேதப்படுத்தும். இந்த புழுக்களை கட்டுப்படுத்திட மாலை நேரங்களில் ஒரு ஏக்கருக்கு 500 மிலி., குளேரொபைரியாஸ் அல்லது 400 மிலி., எண்டோசல்பான் மருந்தினை பயிரின் மேற்பரப்பில் தெளிக்க வேண்டும் என மேற்படி தகவலை தென்திருப்பேரை வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பாரதி தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...