விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கூடுதல் மகசூலுக்கு வழி: பயறு விவசாயிகள் கவனத்திற்கு

சிவகங்கை உதவி இயக்குனர் லயோலா அன்புக்கரசி அறிக்கை: பயறு வகை பயிர்களில் கூடுதல் மகசூல் பெற, கூட்டு நுண்சத்து தெளிக்கலாம். உளுந்து, பாசி, தட்டை பயறுகள், விதைத்த 35 நாட்களில் பூத்து, காய் பிடிக்கும். தற்போது பயிருக்கு தழைச்சத்து அதிகம் தேவை. குறுகிய காலத்தில் டி.ஏ.பி., அமோனியம் சல்பேட், போரக்ஸ் கலந்த கூட்டு நுண்சத்துகளை, இலை வழி ஊட்டமாக பயிருக்கு தெளிக்கலாம்.
ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ டி.ஏ.பி., ஒரு கிலோ அமோனியம் சல்பேட், அரை கிலோ போரக்ஸ் மருந்துகளை, 37 லிட்டர் நீரில், 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை வடிகட்டினால், 35 லிட்டர் கரைசல் கிடைக்கும். இதனுடன் 465 லிட்டர் தண்ணீர் கலந்து, ஒரு எக்டேர் பயிரில் தெளிக்கலாம். இதனால் பூ உதிர்வது தடுக்கப்பட்டு, விளைச்சல் அதிகரிக்கும் என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...