விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் திட்டம்

மதுரை வேளாண் உதவி இயக்குநர் திரு.சாத்தப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் விற்பனைத்துறையில் விளை பொருட்களை ஈடாக வைத்து கடன்பெறும் திட்டம் இது. விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும் நேரத்தில் தங்களுடைய விளை பொருட்களுக்கு குறைவான விலை கிடைக்கிறது. அப்பொழுது விளைபொருட்களை விற்பனை செய்யாமல் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிட்டங்கிகளில் இருப்பு வைத்து ஈடாக கடன் பெற்று சந்தையில் விலை உயரும் சமயம் விற்பனை செய்யலாம். இதனால் அதிக லாபம் பெறலாம்.
இப்படி பெறப்படும் கடனுக்கு-
1.முதல் 15 நாட்களுக்கு கடன்பெறும் தொகைக்கு வட்டி எதுவும் இல்லை.
2.16 வது நாள் முதல் 180 வது நாள் முடிய கடன் தொகைக்கு 5 சதவீதம் வட்டி கணக்கிடப்படுகிறது.
3. 6 மாதம் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
4. விஞ்ஞான முறைப்படி பாதுகாக்கப்படுகிறது.
5.இருப்பு வைக்கும் விளை பொருட்கள் இன்சூரன்ஸ் செய்யப்படுகின்றன.
6. இலவச தரம் பிரிப்பு செய்து விளை பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

தற்பொழுது மதுரை மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்மூட்டைகளை மதுரை, திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் இரு்ப்பு வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்சமாக 1 லட்சம் அல்லது சந்தை மதி்ப்பில் 50 சதவிகிதம கடன் பெறமுடியும்.
இது தொடர்பாக திரு.பாஸ்கர், செயலாளர்,
மதுரை விற்பனைக்குழு, 145.ஏ. அண்ணாநகர், மதுரை 20.போன்-98434 94049 என்ற எண்ணில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...