விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மணிலாவிற்கு மானியத்தில் ஜிப்சம்


மணிலா பயிருக்கு மானியத்தில் ஜிப்சம் வாங்கி விவசாயிகள் பயன்பெற வேண்டுமென வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கே.சி.ராகினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரவை மார்கழி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட மணிலா தற்போது பூக்கும் தருணத்தில் உள்ளது. இந்த சமயத்தில் ஜிப்சம் இடுவதால் நல்ல மகசூல் பெற முடியும். கால்சியம் மற்றும் கந்தக குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இட்டால் நல்ல பயனை தரும். ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் விதைத்த 40 முதல் 45வது நாளில் பாசன பயிருக்கும், 40 முதல் 75வது நாளில் மானாவாரி பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து ஜிப்சம் இட வேண்டும். மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு ஒன்று சேர்த்து மண்ணை அணைக்க வேண்டும். ஜிப்சம் அதிக காய்கள் உருவாகுவதை தூண்டுகிறது. இரவையில் மணிலா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜிப்சத்தை மானியத்தில் பெற்று மணிலாவிற்கு இட்டு மகசூலை பெருக்க வேண்டும். ஐசோபாம் எண்ணெய் வித்து திட்டத்தின் மூலம் மானியத்தில் ஜிப்சத்தை கந்திலி வட்டார வேளாண்மை விரிவாக்கத்திற்கு வந்து பெற்று செல்லலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...