விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நெற்பயிரை காக்க யோசனை

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நெற்பயிரை தாக்கு ஆனைக்கொம்பன் மற்றும் இலைமடக்குப்புழு பரவாமல் தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் தற் போது பயிரிடப்பட் டுள்ள நெல்சம்பா பயிர் வளர்ச்சிப் பருவத்தில் உள் ளது. இப்பயிரில் ஆனைக் கொம்பன் மற்றும் இலை மடக்குப் புழுவின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது.இப்பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் கடைபிடிக்கவேண்டிய முறைகள்: விளக்குப்பொறி வைத்து ஆனைக்கொம்பன் ஈக்கள் மற்றும் இலை மடக்குப்புழுக்களின் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். தழைச்சத்தினை பரிந்துரைக் கப்பட்ட அளவிற்கு மேல் இடக்கூடாது. வயலில்நீரை காய்ச்சலும் பாய்ச்சலுமாக பராமரிக்கவேண்டும். இப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் ரசாயன பூச்சிக்கொல் லியான புரபனபாஸ் ஒரு எக்டேருக்கு 1,000 மில்லி லிட்டரை 500 லிட்டர் தண்ணீரில் கலந்துதெளிக்கவும். அல்லது அசாடிராக்டின் ஒருசதம் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லியினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் கள் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும்.மேலும் இப்பகுதியில் துத்தநாக சத்து குறைபாடு தென்படுகிறது. இதற்கு ஒரு லிட்டர் நீரில் யூரியா 10 கிராம் துத்தநாக சல்வேட் 1 கிராம் கலந்துதெளிக்கவேண்டும். மாலை நேரத் தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிப் பது சிறந்தது. மேலும் விபரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களை அணுகலாம்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...