விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நெல்பயிரில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்த யோசனை


நெல்பயிரில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.செந்துறை வட்டாரத்தில் தற்சமயம் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர் வளர்ச்சி பருவம், பூப்பருவம், அறுவடை பருவம் ஆகிய நிலைகளில் உள்ளது.
செந்துறை பெரிய ஏரி, நக்கம்பாடி புது ஏரி, பெரிய ஏரி, குமுளூர் பெரிய ஏரி ஆகிய பாசன ஏரிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களில் பூப்பருவம் மற்றும் அறுவடை பருவம் ஆகிய நிலையில் உள்ள நெல் பயிர்களில் தற்சமயம் ஆங்காங்கே ""புகை யான் பூச்சியின் தாக்குதல்'' காணப்படுகிறது.புகையான் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் புகையான் பூச்சி நெல் பயிரின் தண்டுப் பகுதியில் (நெல் பயிரின் அடிப்பாகத்தில்) இருந்து சாற்றை உறிஞ்சி சாப்பிடும். தண்டு பகுதியை கையினால் தட்டினால் கொசு போல புகையான் பூச்சி பறப்பதைக் காணலாம். தண்டுப் பகுதியில் ஏராளமான புகையான் பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால் பயிர் வட்ட வட்டமாக காய்ந்து சருகு போல தீயினால் எரித்தது போல் காணப்படும்.


கட்டுப்படுத்தும் முறைகள் � தாக்குதல் காணப்படும் வயல்களில் நீரை உடனடியாக வடிக்க வேண்டும். வயலில் இருந்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட வேண்டும்.� நெல் பயிரை பட்டம் பட்டமாக பிரித்து இரண்டு பக்கமும் நெல் பயிரின் தண்டுப் பகுதி சூரிய ஒளி படும்படி ஒதுக்கிவிட வேண்டும்.� வயலில் விளக்குப்பொறி வைத்து புகையான் பூச்சி இருப்பதை கண்காணிக்க வேண்டும்.� தழைச்சத்து உரமான யூரியாவை இடக்கூடாது. பாதிக்கப்பட்ட பயிரில் தண்டுப்பகுதி நன்கு நனையும் படி மருந்து அடிக்க வேண்டும்.கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒரு மருந்தை கைத்தெளிப்பானால் மட்டுமே ஒரு ஏக்கருக்கு அடிக்கவும், (விசைத் தெளிப்பானால் கட்டாயம் மருந்து அடிப்பதை தவிர்க்க வேண்டும்)இமிடாகுளோபிரிட் - 75 மிலி(அல்லது)அசிபேட் - 200 கிராம்(அல்லது) வேப்பங்கொட்டை சாறு ஊற வைத்து அடிக்கவும்.மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதிக்கு வரும் உதவி வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவர்களையோ அல்லது செந்துறை வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகி பயனடையுமாறு செந்துறை வட்டார வேளாண் உதவி இயக்குநர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...