விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மண் ஆய்வின் மூலம் உரம் செலவு குறைப்பு வேளாண் அதிகாரி அறிவுரை • "மண் ஆய்வு முடிவு குறித்த விபரங்களை மண்வள அட்டைகளின் மூலம் அறிந்து, அதன் அடிப்படையில் சிக்கனமாக உரமிட்டு சாகுபடி செலவை குறைக்கலாம்' என, நாமக்கல் மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் ஜெயக்குமார் பேசி �ர். நாமக்கல் உழவர் பயிற்சி நிலையம் சார்பில், விவசாயிகளுக்கான கிராம அடிப்படை பயிற்சி முகாம், பரமத்தி வட்டாரம் கூடச்சேரியில் நடந்தது.  பஞ்சாயத்து தலைவர் திலகவதி தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம், மக்காச்சோளம் சாகுபடி மற்றும் இயற்கை வேளாண் குறித்தும், விதைச்சான்று உதவி இயக்குனர் கிருஷ்ணராஜ், வேளாண் காப்பீட்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி, பயிர் காப்பீட்டு பற்றியும் விளக்கினர். நடமாடும் மண் ஆய்வுக்கூட வேளாண் அலுவலர் ஜெயக்குமார் மண் வளம் குறித்து பேசியதாவது:  மண்ணில் கலந்துள்ள சத்துக்கள் வயலுக்கு வயல் மாறுபட்டிருப்பதாலும், பயிருக்கு பயிர் தேவைப்படும் சத்துக்களின் அளவு மாறுபடுவதாலும், பயிருக்கு ஏற்ற உரம் சிபாரிசை மண் ஆய்வு மூலமே வழங்க முடியும். அதன் மூலம் அதிகமாக உரமிடுவதையும், அதனால் உண்டாகும் அதிகப்படியான செலவையும் தடுக்கலாம். களர், உவர் மற்றும் அமில நிலங்களை அறிந்து அவற்றை சீர்படுத்தலாம்.  மண் மாதிரி சேகரிக்கும் போது எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரங்களின் நிழல் விழும் இடங்கள், நீர் தேங்கியுள்ள இடங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  நெல், ராகி, சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு அரை அடி ஆழத்திலும், பருத்தி, மிளகாய், மரவள்ளி போன்ற பயிர்களுக்கு முக்கால் அடி ஆழத்திலும், மா, தென்னை போன்ற பயிர்களுக்கு 3 அடி ஆழத்திலும் குழி எடுத்து அதில் ஒவ்வொரு அடிக்கும் மண் மாதிரி தனித்தனியே எடுக்க வேண்டும்.  மண் மாதிரியுடன் விவசாயி பெயர், சர்வே எண், உர சிபாரிசு தேவைப்படும் பயிர், பாசன வசதி போன்ற விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு பேரூட்டச்சத்து ஆய்வுக்கு 5 ரூபாய் மற்றும் நுண்ணூட்டச்சத்து ஆய்வுக்கு 10 ரூபாய் வீதம் வேளாண் விரிவாக்க மையத்தில் செலுத்த வேண்டும்.ஆய்வு முடிவு குறித்த விபரங்களை மண்வள அட்டைகளின் மூலம் அறிந்து அதன் அடிப்படையில் சிக்கனமாக உரமிட்டு சாகுபடி செலவை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  வட்டார துணை வேளாண் அலுவலர் சவுந்திரமேகலை, உதவி தோட்டக்கலை அலுவலர் நாகராஜன், வணிக வேளாண் அலுவலர் ராஜேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன், வனவர் கந்தசாமி, பட்டுவளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் சந்திரசேகரன், லட்சுமி அக்ரி கிளினிக் நிறுவனர் பிரசன்னம் ஆகியோர் தத்தமது துறையை பற்றி விளக்கினர். உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் அன்புச்செல்வி, நெல் விதைகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி செய்தல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் பிரகாஷ் செய்திருந்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...