விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பருத்தி சாகுபடி விவசாயிகள் கவனத்திற்கு


குளிர் கால பருத்தி சாகுபடியில் வாடல் நோயை மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என தேனி விவசாயத்துறை இணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகாக்களில் குளிர் கால பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது.

பயிர்கள் முதிர்ச்சி அடைந்து அறுவடை நிலையில் உள்ளன. இலைகள் சிவப்பு நிறமாக மாறி பயிர்கள் வாடும் நிலையில் உள்ளன. மக்னீசியம் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையே இதற்கு காரணம். இதனை துவக்கத்திலே தவிர்க்க விவசாயத்துறையில் தயாரிக்கப்படும் பருத்தி நுண்ணூட்டச் சத்தை பயிர்களுக்கு இட வேண்டும்.
ஏக்கருக்கு ஐந்து கிலோ வீதம் நடுவதற்கு முன் மணல் கலந்தோ அல்லது எரு கலந்தோ நிலத்தில் சீராக தூவ வேண்டும். இதன் மூலம் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை தவிர்க்கப்படும். மக்னீசியம் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்ட பின் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.
அதற்கு மக்னீசியம் சல்பேட் நுண்ணூட்டச் சத்து ஐந்து கிராம் மற்றும் யூரியா ஐந்து கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் காலை நேரத்தில் பருத்தியில் நன்கு நனையும்படி கைத் தெளிப்பானை கொண்டு தெளிக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளித்தால் நல்ல மகசூல் கிடைக்கும்,''என தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

1 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

 1. பெயரில்லா

  அய்யா வணக்கம் ..,
  நாங்கள் பருத்தி பயிர் தொழில் செய்கிறோம், எங்களிடம் மூன்று ஆயிரம் கிலோ பருத்தி இருக்குது, இப்ப விலை நல்ல இருக்கு ஒரு கிலோ அறுபது ரூபாய், நாங்க மார்ச் பதினைந்து தேதிக்கு பிறகு போடலாம் என்று நினைக்கின்றோம் ......, இப்பவே போட்டுடலாம?
  இன்னும் விலை உயரமா?
  சிறுது காலம் கழித்து போடலாமா?
  எங்களுக்கு பதில் சொல்லுறிங்களா ப்ளீஸ் ........ this is my email anbum94@gmail.com
  (9043500268)

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...