விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மணிலா பயிரை காப்பாற்ற வேளாண் துறை யோசனை

மணிலா பயிரை இளம் புழுக்கள் சுரண்டி தின்றுவிடும். இதனால் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேளாண்துறை உதவி இயக்குனர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: இளம் புழுக்கள் தளிர் இலைகளில் மேல்பாகத்தை சுரண்டி தின்னும். வளர்ந்த புழுக்கள், இலைகளின் நடு நரம்புகளை தவிர மற்ற பாகங்களை தின்றுவிடும். இந்த புழுக்கள் பகல் நேரங்களில் மண்ணில் பதுங்கி இருந்து இரவில் இலைகளை தின்னும். இதனால் மணிலா பயிரில் காய் பிடிப்பு குறைந்து மகசூல் குறைய வாய்ப்புள்ளது. அதனால் இந்த புழுக்களை கட்டுப்படுத்த நச்சு உணவு தயார் செய்து மாலை நேரங்களில் வயலில் வைக்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு பச்சரிசி தவிடு 5 கிலோ, வெல்லம் ஒரு கிலோ, கார்பரைல் (செவின் 50% தூள்) அரை கிலோ, இவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, வயலில் பல இடங்களில் மாலை நேரத்தில் வைக்கலாம். இதனால் வளர்ந்த புழுக்கள் கவரப்பட்டு, விஷ உணவை உண்டு இறந்து போகும். இதனால் மணிலா பயிர்கள் செழித்து வளர்ந்து, மகசூல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...