விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

உளுந்து பயிர் மகசூலை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள்: கலெக்டர் தகவல்

நாகை மாவட்டத்தில் உளுந்து பயிரில் மகசூலை அதிகரிக்க தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் முனியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உளுந்து பயிரில் மகசூலை அதிகரிக்க தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்திற்கு 2.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சான்று பெற்ற உளுந்து பயறு விதைகளுக்கு கிலோவிற்கு 20 ரூபாய் மானியம், நெல் தரிசில் மகசூலை அதிகரிக்கவும் நுண்ணூட்ட பற்றாக்குறையை போக்கவும் 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட உரம் வழங்கப்படுகிறது. ஜிப்சம் ஒரு எக்டேருக்கு 750 ரூபாய் வீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.


நெல் தரிசில் உளுந்து பயறு மகசூலை அதிகரிக்க 20 முதல் 25ம் நாள் மற்றும் 30 முதல் 35ம் நாள் பூக்கும் தருணத்தில் 2 தடவை இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை இலைவழி உரமாக தெளிக்கவேண்டும். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ஏக்கரில் டி.ஏ.பி. கரைசலை தெளிக்க 2.5 ஏக்கருக்கு 200 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்தில் நெல் தரிசில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து,பயறு பயிர்கள் தற்போது 15 முதல் 20 நாட்கள் பயிராக உள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலையை சேதப்படுத்தும் பூச்சிகள் தாக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்க்கவும், பூச்சிகள் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக இருந்தால் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். அல்லது ஒரு எக்டேருக்கு என்.பி. வைரஸ் கரைசல் 250 புழுக்களுக்கு சமமான 250 மில்லி. என்.பி. வைரஸ் கரைசலை 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். என்.பி. வைரஸ் கரைசல் தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் வளர்ச்சி தடைபடுவதால் மறு உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்களை அணுகலாம்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...