விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு டன்னுக்கு 2 ஆயிரம் தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மதுரை அருகில் உள்ள அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன் கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு, 8.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் தரவேண்டும். கரும்பு அறுவடை கூலியை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.விவசாயிகளிடம் டன் ஒன்றுக்கு ரூ.100 வீதம் பிடித்தம செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. உடனே ஆலையில் மின்சார துணை தொழிலை தொடங்க வேண்டும். ஆலையில் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஆன காரணத்தை கண்டு பிடிக்க சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் விவசாயிகளின் கிணறுகளுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும். ஆலையில் காலியாக உள்ள கரும்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்புகளையும் ஆலையில் அரவை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். திருமங்கலம் தாலூகா தலைவர் சி.முத்துராமன், வடக்கூர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...