விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மாவு பூச்சியை அழிக்க வேம்பு மருந்து தெளிப்புமாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட 7,000 ஏக்கர் நிலத்தில், வேளாண் துறை சார்பில் இலவசமாக வேம்பு மருந்து தெளிக்கப் படுகிறது.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்பெரி, காய்கறி, மரவள்ளி, பூ, பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களில், பப்பாளி மாவுப்பூச்சி தாக்குதலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காற்று மூலம் பரவும் இப்பூச்சி குறுகிய காலத்தில் அதிக அளவில் பெருகி விட்டது. பயிரின் சாற்றை உறிஞ்சி குடித்து, தனது நச்சுத்தன்மை மூலம் பயிரை பாதிக்கிறது.
இப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறையை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். இப்பூச்சியை கட்டுப்படுத்தவும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வேளாண்துறை சார்பில் சிறப்பு முகாம், கடந்த வாரம் அன்னூர் வட்டாரத்தில் அல்லப்பாளையத்தில் துவங்கியது. அடுத்த கட்டமாக கஞ்சப்பள்ளி ஊராட்சியில் மருந்து தெளிக்கும் பணி நேற்று முன் தினம் துவங்கியது. ஊராட்சி தலைவர் செல்வநாயகி மருந்து தெளிப்பு பணியை துவக்கி வைத்தார்.
வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சீனிராஜ் பேசியதாவது: மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு "அசாடிராக்டின்' மருந்தை முதல் கட்டமாக ஒரு சதவீதமும், 15 நாள் கழித்து "புரோபென்பாஸ்' மருந்தும் தெளிக் கப்படுகிறது. பூச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எறிய வேண்டும்; சுழற்சி முறையில் பயிர் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் வேம்பு மருந்து மற்றும் "புரோபென்பாஸ்' மருந்து முழுவதும் இலவசமாக வழங் கப்படுகிறது. விவசாயிகள் இப்பணிக்கு என எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. காரே கவுண்டன்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சிகளிலும் மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. இவ்வாறு, சீனிராஜ் பேசினார்.
பூச்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்ட 7,000 ஏக்கரில் இதுவரை 4,250 ஏக்கரில் மருந்து தெளிக்கப் பட்டுள்ளது. "இப்பணியில் விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவுப்பூச்சி குறித்த சந்தேகங்கள் மற்றும் புகாருக்கு 04254-264623, 97510 16200 என்கிற எண்களில் தெரிவிக்கலாம்' என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...