விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கால்நடைகளுக்கு பராமரிப்பு அவசியம்'

""கோடை வெயில் தாக்கத்தால் கால்நடைகளுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுகின்றன. அவைகளுக்கு, உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்,'' என கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலை தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தாண்டு, குளிர் சீதோஷ்ண நிலை நீண்ட காலம் நீடித்தது. பருவத்துக்கு முன்னதாகவே வெயில் துவங்கி விட்டது. இதனால், கால்நடைகளை சில நோய்கள் தாக்கி வருகின்றன.வெயில் காலத்தில் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். உஷ்ணத்தை மாடுகளால் தாங்கிக் கொள்ள இயலாது. இவைகளுக்கு வாய்ச்சப்பை நோய் ஏற்படும். வாய்களில் நுரைவடிந்து கொண்டே இருக்கும். மாடுகளின் மடி, கால்பாதம், கால்குளம்பு ஆகிய இடங்களில் கொப்பளங்கள் வரக்கூடும். சில வகையான மாடுகளுக்கு நாக்கில் கூட கொப்பளங்கள் வரக்கூடும். போதிய தடுப்பூசிகள் இருக்கின்றன; நோய் தாக்கும் முன், மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.கோழிகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாமல் இருப்பதால், வெயிலின் தாக்கம் அவைகளை எளிதில் பாதித்து விடும். இதில், நாட்டுக்கோழிக்கு பாதிப்பு குறைவு; வெயில் நேரத்தில் அடிக்கும் காற்று, அனல் காற்றாக வீசுவதால் பண்ணை கோழிகளை அதிகமாக பாதிக்கும்.பண்ணை கோழிகள், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன. பண்ணைகளைச் சுற்றி, ஈரமான சாக்குகளை கட்டி வைக்க வேண்டும். இது, அனல் காற்றை கொஞ்சம் குறைக்கும். இதனால், கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். தவிர, சில பண்ணைகளில் சிமென்ட் சீட், தகர சீட்டுகள் போடப்பட்டுள் ளன. இத்தகைய பண்ணைகளின் கூரை மீது ஓலை போட வேண்டும்.வெயில் தாக்கத்தால், வெள்ளாடுகளை விட, செம்மறி ஆடுகளுக்கு நோய் ஏற்படும். அம்மை நோய் ஏற்படுவதால், ஆடுகளுக்கு சளி, காய்ச்சல் ஏற்படும். ஆடுகள் மிகவும் சோர்ந்த நிலையில் இருக்கும். வைரஸ் நோயான பி.பி.ஆர்., மட்டுமே வெள்ளாடுகளுக்கு ஏற்படும். இந்நோய் தாக்குதலுக்கு மருந்து வசதி அதிகமாக உள்ளன. பி.பி.ஆர்., நோய் தாக்காமல் இருக்க, ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.அனைத்து வகையான கால்நடைகளுக்கும், வெயில் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை "எலக்ட்ரோ கேர்' பவுடர் தருகிறது. இது, தாது உப்புகள் நிறைந்த சத்தான பவுடர். சுத்தமான தூய நீரில் இப்பவுடரை கலந்து கொடுப்பதன் மூலம் அனைத்து கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.இவ்வாறு, செல்வராஜ் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...