விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விதை மஞ்சள் எடுக்கும் போது, உஷார் : எச்சரிக்கிறது தோட்டக்கலைத்துறைஇந்தாண்டு, மஞ்சள் பயிரில் நல்ல விளைச்சல் மற்றும் லாபம் கிடைத்ததால், அதிகளவில் பயிரிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். விதை மஞ்சள் வாங்கும் போது, அதிக கவனம் செலுத்த வேண்டும் என தோட்டக்கலை அறிவுறுத்தியுள்ளது.திருப்பூரில் மஞ்சள் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இந்தாண்டு மஞ்சளுக்கு அதிக விலை கிடைத்ததால், விவசாயிகள் இடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மகசூலும் நன்றாக உள்ளதால், வருங்காலங்களில் அதிகளவில் பயிர் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.மஞ்சள் விளைச்சல் குறித்து விவசாயிகள் கூறியதாவது:கடந்தாண்டை விட, இந்தாண்டு மஞ்சள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. விலை அதிகமாக இருப்பதால், சந்தையில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மஞ்சளும், வெங்காயமும் ஊடுபயிராக விளைவிப்பதால், செலவு குறைகிறது. ஒரு குவிண்டால் மஞ்சள் 10 ஆயிரம் வரை விற்பனையாகிறது.ஏக்கருக்கு, சாதாரணமாக 15 முதல் 20 குவிண்டால் விளைச்சல் தரும்; அதிகபட்சமாக 30 குவிண்டால் வரை விளைச்சலை எதிர்பார்க்கலாம். இந்தாண்டு நல்ல பக்குவம் செய்த விவசாயிகளுக்கு, 20 குவிண்டாலில் இருந்து 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது. ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு, இதர செலவு தவிர, நல்ல மகசூலும், விலையும் கிடைத்துள்ளதால், ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது.திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் மஞ்சள் மற்றும் வெங்காயம் அதிகளவில் பயிரிடுகின்றனர். வெங்காயத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, நஷ்டம் தரும் சூழல் உள்ளது. வெங்காயம் ஒருபுறம் நஷ்டம் தந்தாலும், மஞ்சள் அதை ஈடு செய்துள்ளது. மஞ்சள் பயிரில் எதிர்பார்த்த மகசூலும், விலையும் கிடைத்ததால், வரும் நாட்களில் மஞ்சள் பயிரிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.


இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.வரும் நாட்களில் மஞ்சள் பயிரை அதிகளவில் பயிரிட திட்டமிட்டு, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை மஞ்சளை சேகரித்து வருகின்றனர். ஆனால், விதை மஞ்சளை செதில் பூச்சிகள் தாக்கி, விதையின் தரத்தை குறைத்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே, விதை மஞ்சளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தோட்டக்கலை துறை அதிகாரி சந்தானகிருஷ்ணன் கூறியதாவது:எதிர்காலத்தில் அதிகளவில் பயிரிடுவதற்காக, தேவையான விதை மஞ்சளை எடுத்து வைக்கின்றனர். பூச்சி மற்றும் நோய் தாக்கப்படாத, அழுகல் இல்லாத, பச்சை மஞ்சளை விதைக்கு எடுக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான, நிழல் பகுதியில் மஞ்சள் பயிரை பாதுகாக்க வேண்டும். செதில் பூச்சிகள் விதை மஞ்சளை அதிகளவில் தாக்கி, அதில் உள்ள சாற்றை ஊறிஞ்சும் நிலை உள்ளது.ஒரு லிட்டர் தண்ணீரில் 4 மி.லி., விகிதத்தில் "பாசலோன்' என்ற பூச்சிக்கொல்லி மருந்தில், 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்; நிலப்பரப்பு மீது படாமல், படல் போன்றவற்றின் மூலம் ஒரு அடி உயரத்தில் வைக்க வேண்டும். விதை மஞ்சளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பது அவசியம். அதிக கவனம் செலுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விதை மஞ்சளை தயார் செய்ய வேண்டும்.தேசிய தோட்டக்கலை துறை மூலம், தோட்டக்கலை துறை சார்பில் மஞ்சள் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு 11,250 ரூபாய் வரை மானியம் அளிக்கப்படுகிறது. மஞ்சள் பயிரிடும் விவசாயிகள், தங்களுக்கு தேவையான சந்தேகங்களை தோட்டக்கலை துறையில் தெரிந்து கொள்ளலாம், என்றார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...