விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கரும்பில் வெள்ளை ஈ தாக்குதல்: கட்டுப்படுத்த ஆலோசனைகரும்பில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் ராமலிங்கம் ஆலோசனை தெரிவித்துள் ளார்.
இது குறித்து அவரது செய்திகுறிப்பு: கரும்பில் ஆங்காங்கே சில பகுதிகளில், இலைகள் இளஞ்சிவுப்பு நிறமாக மாறி வளர்ச்சி குன்றி, இலைகளின் பின்புறத்தில் சாம்பல்நிறம், கருப்பு நிற,நீள் வட்ட வடிவ பூச்சிகள் நகராமல் ஒட்டியிருக்கும். இப்பூச்சிகள் வெண்ணிற மாவு போன்ற இழைகளுடன் காணப் பட்டால், அந்த கரும்பு பயிர்களில் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளது என்பது உறுதி. நட்ட பயிரை விட, கட்டை பயிரில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் காணப்படும்.
தழைச்சத்து குறைபாடு, மண்ணில் களர்தன்மை, வடிகால் வசதி குறைபாடு, வறட்சி போன்ற காரணங்களினால் இந்த ஈ தாக்குதல் விரைந்து பரவும். இதை கட்டுப்படுத்த மண் பரிசோதனை செய்து, களர் தன்மையை குறைக்க வேண்டும். சிபாரிசுப்படி தழைச்சத்து உரமிட்டு குறைபாட்டை தவிர்க்க வேண்டும். வெள்ளை ஈ தாக்கிய, காய்ந்த தோகைகளை எடுத்து அப்புறப்படுத்தி, மானோகுரோட்டாபாஸ் அல்லது மாலத்தியான் மருந்தை, ஏக்கருக்கு 400 லிட்டர் தண்ணீரில் 800 மில்லி அளவில் சேர்த்து, பயிர் முழுவதும் நனையும் படி தெளிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் 15 நாளுக்கு பின், பரிசோதனை செய்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். பூச்சி மருந்து கரைசல் பயிரின் மீது நன்கு பரவி படிவதற்காக, வேளாண் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றை, ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு அரை மில்லி என்ற அளவில் சேர்த்து தெளித்து வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம், என தெரிவித்துள்ளார்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...