விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மாவுப்பூச்சி தாக்குதல் கோடையில் அதிகரிக்க வாய்ப்பு கட்டுப்படுத்த வேளாண் துறை நடவடிக்கைஈரோடு: கோடை பருவத்தில் மாவு பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி அனைத்து பயிர்களையும் தாக்கிடும் சூழ்நிலை உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதை கட்டுப்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்றாண்டு மாவுப்பூச்சி தாக்குதல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மல்பெரி, பப்பாளி, குச்சிக்கிழங்கு, கொய்யா உள்பட பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர்களின் இலைகளை இப்பூச்சி முற்றிலும் உண்பதால், பயிர்கள் கருகி விளைச்சல் பாதித்தது. நவம்பர் மாதத்தில் பெய்த மழை காரணமாக இயற்கையாகவே இப்பூச்சி தாக்குதல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. மீண்டும் இப்போது கோடை வெயில் கொளுத்துவதால் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. வெயில் அதிகமாகும் போது இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது. மாவுப்பூச்சி கட்டுப்பாடு குறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குனர் கோபால் கூறியதாவது: மல்பெரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த 820 ஹெக்டேர் பரப்பளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், மல்பெரி பயிரில் மாவு பூச்சி கட்டுப்படுத்தப்படும். எனினும், கோடையில் மாவுப்பூச்சி தாக்கம் அனைத்து பயிர்களிலும் காணப்படும். பப்பாளி, பருத்தி, கொய்யா, காட்டாமணக்கு, அவரை, மரவள்ளி, செம்பருத்தி, எள், நிலக்கடலை, சூரியகாந்தி, வெண்டை, கத்தரிக்காய், தக்காளி மற்றும் மல்பெரி ஆகிய பயிர்களையும், பார்த்தீனியம், துத்தி, சாரணை உட்பட 70க்கும் மேற்பட்ட களை செடிகளையும் இப்பூச்சி தாக்கும்.மாவுப்பூச்சி தாக்கப்பட்ட பயிர்களில் மஞ்சள் நிறமாக, காய்ந்த, வளைந்த, நெளிந்த மற்றும் வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும். மாவு பூச்சிகளுடன் சிகப்பு மற்றும் கருப்பு நிற எறும்புகளின் நடமாட்டமும் இருக்கும். மாவு பூச்சி தாக்கப்பட்ட களை செடிகளை அகற்றி அழித்து விட வேண்டும். எரும்புகளின் நடமாட்டத்தை கவனிக்க வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் இரை விழுங்கிகள் அதிகம் இருக்கும் போது பூச்சி கொல்லி தெளிப்பதை தவிர்க்க வேண்டும். க்ரிட்டோலேமஸ் மாண்ட்ரோசியரி என்னும் பொறி வண்டு, மூன்று வகை குளவி, ஸ்படலசி, எபியஸ் என்னும் புழு ஆகியவை மாவு பூச்சியை தாக்குகின்றன. இவற்றை சேகரித்து, சேதம் அதிகம் உள்ள இடங்களில் விட்டு அதன் மூலம் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மாவு பூச்சிகளின் சேதம் குறைவாக இருக்கும் போது, தாவரப் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தாக்கப்பட்ட செடிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் தெளித்தல் போதுமானது. வேப்பெண்ணெய் இரண்டு சதம், வேப்பங்கொட்டை பருப்பு சாறு ஐந்து சதவீதம், மீன் எண்ணெய் சோப்பு 25 கிராம் மூலம் கட்டுப்படுத்த முடியும். சேதம் அதிகமாக காணப்படும் போது புரோபனோபாஸ், குளோர்பைரிபாஸ், டைமிதோயேட், தயோமீத்தாக்சம், இமிடோகுளோப்ரிட் ஆகிய ரசாயன பூச்சி கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மீண்டும் செடிகள் முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சி மருந்து தெளிக்கும் போது ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி டீபால் அல்லது சாண்டோவிட் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு பூச்சி கொல்லியை திரும்ப திரும்ப உபயோகிக்காமல், சுழற்சி முறையில் வெவ்வேறு பூச்சி கொல்லிகளை தேவைக்கேற்ப உபயோகிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...