மண் வளம் பெருக இயற்கை விவசாயம் : விவசாயிகள் கூட்டத்தில் விளக்கம்
முற்பகல் 9:33 தகவல்கள், மண் வளம் பெருக இயற்கை விவசாயம் 0 கருத்துகள் Admin
கோவை: ''விவசாய நிலம் அனைத்து சத்துகளையும் பெற்று செழிக்க, இயற்கை வழி விவசாயத்தை கையாள விவசாயிகள் முன்வரவேண்டும்,'' என, வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தரேகா பேசினார்.பெரியநாயக்கன்பாளையம், புதுப்புதூரில் மண்புழு உரம் தயாரிப்பு செயல்விளக்க முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தரேகா தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், வீடு மற்றும் தோட்டக்கழிவுகளை 45 நாட்கள் குவியலாக இட்டு, மட்க வைத்து, இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரசாயன உரங்கள், பூச்சி மருந்து பயன்படுத்துவதால் மண் வளம் குறைந்து, மண்ணில் உள்ள உயிர்கள் அழிந்து, மண் வளம் பாதிக்கப்படும். இயற்கை விவசாய முறையை கையாள விவசாயிகள் முன் வரவேண்டும்.
மண்புழு உரம் தவிர, மண்புழு வடிநீரை சேமித்து பயிர்களுக்கு தெளிப்பதால் அவை, பயிர் ஊக்கியாக செயல்பட்டு, நல்ல மகசூல் கிடைக்கும்.இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.முகாமில், மண்புழு வடிநீரை குழி மற்றும் தொட்டிகளில் சேமிப்பது குறித்து உதவி வேளாண்மை அலுவலர் மோகன்தாரியா பட்ஜக், ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் செயல்விளக்கமளித்தனர். துணை வேளாண்மை அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: தகவல்கள், மண் வளம் பெருக இயற்கை விவசாயம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...