விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் விவசாய அமைப்பு

                                            மதுரை.மார்ச்.24

செய்யும் தொழிலில் பல லட்சங்களை, கோடிகளை குவிக்கும் பலர் எச்சில் கையால் காக்கை கூட விரட்டாதவர்களாக இருப்பதை காணலாம. ஆனால், இடது கை செய்யும உதவி வலது கைக்கு தெரியாமல் உதவிகள் செய்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.மதுரையில் செயல்படும் அக்ரோ கிளப் இதில் இரண்டாவது வகை.
இது, விவசாயம் தொடர்பான தொழில்களில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் இணைந்த ஒரு அமைப்பு.தொடங்கி 8மாதங்களே ஆன நிலையின் இநத அமைப்பின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. எந்த லாப நோக்கமும் இல்லாமல், கேள்விப்பட்ட உதவிகளை உடனே செய்து தருகிறார்கள்.உன் வருமானத்தில் சிறிய பங்கை ஏழைகளுக்கு கொடு என்கிறது விவிலியம். இந்த வேதவாக்கை அப்படியே கடைபிடித்து தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளின் உதவிக்காக செலவிட்டு வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சிஙகராஜ். சிறிய அளவில் உரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை மதுரையில் நடத்தி வருகிறார்.தங்கள் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி நம்மிடம் பகிரிந்து கொண்டார்.
''இன்றைக்கு உலக அளவில் லயன்ஸ்கிளப், ரோட்டரி கிளப் போன்ற சேவை அமைப்புகள் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை பார்த்து எனக்கு இது போன்ற ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. குறிப்பாக ஏழை குழந்தைளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அது இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம. ஏற்கனவே உரம் தயாரிப்பாளர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கம் செயல்படுகிறது. அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எனது முடிவை தெரிவித்தேன். உறுப்பினர்களான சண்முகநாதன், ஹேமா உள்பட அனைவரும் உடனே இந்த அமைப்பை தொடங்கி பதிவு செய்வதென்று முடிவு செய்தார்கள். தற்போது மதுரை அக்ரோ கிளப் என்ற பெயரில் செயல் படடு வருகிறோம்.
இந்த அமைப்பின் மூலம் மதுரையில் உள்ள பார்வையற்ற குழந்தைகள் படிக்க உதவிடும் வகையில் பிரெய்லி புத்தகங்கள், உடைகள் உள்பட 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உதவி செய்தோம். இது தவிர மதுரை புதூர் பகுதியில் உள்ள அன்பகம் மனநலன் குன்றிய குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வீல்சேர், கல்வி உபகரணங்கள் கொடுத்தோம். இது தவிர அந்த குழந்தைகளை மகிழ்ச்சி படுத்த சிறிய தோட்டம் ஒன்றை உருவாக்கி தந்தோம். இத்துடன் மதர் தெரசா இல்லம், சரஸ்வதி பாலர் இல்லம் ஆகிய இடங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் சில உதவிகள் செய்தோம். சமீபத்தில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் இருக்கும் விவேகானந்தா நர்சரி பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் டிவிடி பிளேயர் ஒன்றை வழங்கினோம்.
இப்படியாக சில உதவிகளை செய்து வருகிறோம். வரும் காலத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் ஏழைக்குழந்தைகள் இலவசமாக படிப்பதற்காக ஒரு கட்டணமில்லா பள்ளியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.தற்போது மதுரை அளவில எங்களது உதவிகளை செய்து வருகிறோம். இது போல் பிறமாவட்டங்களில் உள்ள எங்களது சங்க உறுப்பினர்களும் உதவிகள் செய்ய ஆர்வமுடன் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இது போல் சேவைகளை செய்ய வேண்டும் என்ற நிலையில் திட்டமிட்டு, உறுப்பினர்களின் ஆர்வத்தை உறுதிப்படுத்தி அக்ரோ கிளப்பில் இணைத்து வருகிறோம்.நிச்சயமாக இந்த அமைப்பு மூலம் மாவட்டங்கள் தோறும் பலர் பயனடைவார்கள் என்பது நிச்சயம்.எங்கள் அமைப்பில் சேரவிரும்புபவர்கள் விவசாயம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இது போன்ற சேவைகளுக்கு தர உறுதி அளிக்க வேண்டும. மேலும், சிறிதளவு நேரத்தையும் செலவிட தயாாராக இருக்கவேண்டும, இது தான் விதிமுறை.இது போன்ற எண்ணமும், விருப்பமும் உள்ள நபர்களை வரவேற்கிறோம்'' என்கிறார்.
நீங்களும் சேவை செய்ய விரும்புகிறீர்களா.............திரு.சிஙகராஜ அவர்களை 94437 74229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...