விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பயறு வகைகளில் மகசூல் பெறுவது எப்படி?சிவகங்கை மாவட்டத்தில் பயிரிட்டுள்ள உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு வகைகள், தற்போது பூத்து காய் பிடிக்கும் நிலையில் உள்ளன.
இதற்கு தழைச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. இதை இலை வழி ஊட்டமாக பயிருக்கு தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். கூட்டு நுண் சத்தான டி.ஏ.பி., அமோனியம் சல்பேட், போரக்ஸ் கலந்த கலவையை தெளிக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு, 2.5 கிலோ டி.ஏ.பி., ஒரு கிலோ அமோனியம் சல்பேட், அரை கிலோ போராக்ஸ் மருந்தை, 37 லிட்டர் தண்ணீரில், 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டினால், 35 லிட்டர் கரைசல் கிடைக்கும். இதனுடன் 465 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இதை விதைத்த 25 முதல் 35 நாட்களுக்குள் செய்ய வேண்டும். இதனால் பூ உதிர்வது தடுக்கப் பட்டு, நல்ல மகசூல் கிடைக்கும். பயறு வகைகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் ஊக்கி தெளித்து, மகசூலை பெருக்கலாம், என உழவர் பயிற்சி மைய உதவி இயக்குனர் லயோலா அன்புக்கரசி தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...