விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கோடையில் கால்நடைகளுக்கு ஆபத்து : 'மிருக நேய' செயல்பாடு அவசியம்கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதால், கால்நடைகளுக்கு அம்மை, ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. "கால்நடை தானே,' என்ற அலட்சிய எண்ணத்தை கைவிட்டு, "மிருக நேயத்துடன்' செயல்பட்டால், அவற்றை காப்பாற்றலாம். கோடை காலம் துவங்கி விட்டால், மனிதர் முதல் விலங்குகள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தொல்லை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. மனிதரை போலவே கால்நடைகளுக்கும் அம்மை நோய் தாக்கும். தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகளுக்கு பல நோய்கள் ஏற்படும்.

இவற்றை முன்னெச்சரிக்கையாக தடுப்பது அவசியம்.நோய்கள் பல விதம்: மாவட்டத்தில் ஆடுகளுக்கு கொல்லி நோய், நீலநாக்கு, அடைப்பான் (ஆந்தராக்ஸ்), தொண்டை அடைப்பான், துள்ளுமாரி, சப்பை, மாடுகளுக்கு கோமாரி (கானை) நோய்கள் ஏற்படும். சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்புத்தூர், தேவகோட்டை, கல்லல் ஒன்றியங்களில் அதிகளவு செம்மறி ஆடுகள் உள்ளன. ஒட்டுண்ணிகள் மூலம் இவற்றிக்கு நோய்கள் பரவும்.தற்போது நீர் நிலைகள் வற்றிவிடும். இவற்றில் உள்ள பாசி படர்ந்த நீரை பருகுவதால், ஆடுகளை ஈரல் பூச்சி (லிவர் புளூக்) நோய் தாக்கும். நோய் வந்த ஆடுகளுக்கு தாடை பகுதியில் நீர் கோர்த்து, கழுத்து பருத்துவிடும். நோய் கிருமிகள் பாதித்த தீவனம், தண்ணீர் உட்கொள்வதால் "ஆந்த்ராக்ஸ்' நோய் தாக்கும். இதனால் அவை திடீரென இறக்கும். இறந்தவற்றின் வாய், மூக்கு, ஆசன வாயிலிருந்து உடனடியாக கருஞ்சிவப்பு ரத்தம் வெளியேறும், வயிறு வீங்கும்.அம்மை நோய் பாதித்த ஆடுகளுக்கு உடல் முழுவதும்; பால் மாடுகளுக்கு மடி காம்பிலும் கொப்பளங்கள் ஏற்படும். கோமாரி நோய் தாக்கிய மாடுகளுக்கு வாயில் இருந்து நீர் வடியும். சோர்வாக காணப்படும்.கோழிகள்: கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தாக்கும். இந்நோய் வந்த கோழிகள் சோர்வடைந்து, கழிச்சல் ஏற்படும். திடீரென இறக்கும். இதற்கு தடுப்பூசி போடும் பட்சத்தில், நோயில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.இகுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:கோடையில் கால்நடைகளுக்கு அதிகமாக அம்மை, ஆந்த்ராக்ஸ் நோய்கள் பரவும். மாவட்டத்தில் அம்மை நோய் தாக்கம் உள்ளது. நோய் தாக்கிய கால்நடைகளை நிழல் பகுதிகளில் வளர்க்க வேண் டும். தினமும் இரு முறை குளிப்பாட்ட வேண்டும். ஆந்த்ராக்ஸ் நோயால் ஒரு சில ஆடுகள் பலியாகியுள்ளன. நோயை தடுக்க வாரந்தோறும், கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால் நடைகளை மருத்துவமனையில் பரிசோதனை செய்வேண்டும்,'' என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...