விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

சூரியகாந்தி பயிரிடும் பட்டங்கள்: வேளாண் அதிகாரி தகவல்

ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், தை பட்டம் ஆகிய மூன்று பட்டங்களிலும் சூரியகாந்தியை பயிரிடலாம் என பேராசிரியர் மனோகரன் தெரிவித்தார். திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் பட்டய முதலாமாண்டு மாணவர்களுக்கு சூரிய காந்தி வயலில் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. பேராசிரியர் மனோகரன் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். இந்த பயிற்சி குறித்து பேராசிரியர் மனோகரன் கூறுகையில், ஆராய்ச்சி நிலையத்தில் மகசூல் சோதனைக்காக 9 ரகங்கள் அடங் கிய சூரியகாந்தி பயிரிடப்பட் டுள்ளது. இதில் தேர்வு செய்யும் வீரிய ஒட்டு சூரியகாந்தி விதைகளை தமிழகத்தில் 40 இடங் களில் பயிர் செய்து, ஆராய்ச்சி செய்து விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறோம். சூரியகாந்தி பயிரில் பி.எஸ். எச்-1 மற்றும் டி.என்.எஸ்.எச்-1 ஆகியவை வீரிய ஒட்டு ரகங்களாகும். இவற்றின் வயது 85-90 நாட் களாகும். சாதாரண ரக சூரிய காந் தியாக இருந்தால் ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். ஆனால் இத்தகைய வீரிய ஒட்டு ரகங்கள் ஏக்கருக்கு 2 கிலோ போதுமானது.வடிகால் வசதியுள்ள, தண் ணீர் தேங்காத நிலம் சூரியகாந்தி பயிரிட ஏற்றது. ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், தை பட்டம் ஆகிய மூன்று பட்டங்களிலும் சூரியகாந்தியை பயிரிடலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டெசிம் மருந்து கலந்து போடலாம். பாத்திக்குப் பாத்தி 60 செ.மீ., இடைவெளியும், செடிக் குச் செடி 30 செ.மீ., இடை வெளியும் இருக்க வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம் பல் சத்து முறையே 24, 36, 34 சதவீத அடிப்படையில் இருக்க வேண்டும். அதன்படி தழைச்சத் துக்கு ஏக்கருக்கு 52 கிலோவும், மணி சத்தாக 225 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும், சாம்பல் சத்தாக 40 கிலோ பொட்டாஸ் உரமும் இடவேண்டும். அயல் மகரந்த சேர்க்கை நடக்க ஒரு ஏக்கருக்கு 1 தேனீ பெட்டியாவது வைக்க வேண்டும். பிளானோபிக்ஸ் என்ற வளர் ஊக்கியை ஒரு ஏக்கருக்கு 45 மில்லியை 30 மற்றும் 60வது நாளில் தெளிக்க வேண்டும். பூக்கள் மலர ஆரம்பித்த பிறகு இரண்டிரண்டு பூக்களாக சேர்த்து தேய்த்து விட வேண்டும். மெல்லிய மஸ்லின் துணியால் பூவை ஒற்றி எடுத்து மற்ற பூக்களில் விட வேண்டும். இவ்வாறு திண்டிவனம் எண் ணெய் வித்து ஆராய்ச்சி நிலைய போராசிரியர் மனோகரன் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...