கரும்பில் அதிக மகசூல் பெறுவது எப்படி?விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'ஐடியா'
முற்பகல் 5:33 தகவல்கள் 0 கருத்துகள் Admin
மீதி 35 சதவீத தொகை வங்கிகள் மூலம் 3 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் தொகையாக விவசாயிகளுக்கு கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.இது தவிர 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உரங்களும் மற்றும் விதைக்கரும்பு மானியமாக 4 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. எனவே அதிக அளவில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து கரும்பு நடவு செய்ய வேண்டும். மேலும் சொட்டுநீர் பாசன முறையில் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால் இதற்கென ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்திற்கு 90470-49500 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதற்குரிய தீர்வு சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உடனடியாக பெற்றுத்தரப்படும்.
கடந்த ஆண்டு ஆலை அரவைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கப்படும். மேலும் வரும் அரவைப் பருத்திற்கு கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினருக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு தனி அலுவலர் பேசினார்.
திருப்பத்தூர் மேற்கு கோட்ட கரும்பு அலுவலர் டி.கே.வெற்றிவேந்தன் பேசியதாவது:கரும்பில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், பாசன நீர் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. மேலும் சராசரி மகசூலும் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. சேமிக்கப்படும் பாசன நீரால் கூடுதல் பரப்பில் கரும்பும், மற்ற பயிர்களும் விளைவிக்கலாம். சொட்டுநீர் பாசனத்தில் அகலப்பார் முறையில் கரும்பு நடவு செய்வதால் பூச்சி நோய் தாக்குதல் குறையும்.மேலும் கரும்பு அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி கரும்பு வெட்டலாம். அகலப் பார் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், பார்களுக்கு இடையில் பவர் டில்லர், மினி டிராக்டர்களை பயன்படுத்த முடியும். இதனால் கூலியாட்கள் பிரச்சனை குறைகிறது.
சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் கரும்பிற்கு தண்ணீர் கட்டும் செலவும், நேரமும் கூலியாட்கள் பிரச்சனையும் குறைகிறது. மேலும் ஏக்கருக்கு 60 முதல் 70 டன் மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.கரும்பு அபிவிருத்தி அலுவலர்(பொறுப்பு) ஆர்.வெங்கிடசாமி பேசியதாவது:கோடைக் காலத்தில் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச முடியும் பரப்பில் மட்டுமே பொதுவாக கரும்பு நடவு செய்ய வேண்டும். குறைந்தது ஒன்றேகால் அடி ஆழத்திற்காவது வயலில் உழவு செய்ய வேண்டும். கரும்பு நடவிற்கு ஏழு மாத கால வயதிற்குட்பட்ட நாற்றங்கால் வயல்களில் இருந்து மட்டுமே விதைக்கரும்பு எடுத்து நடவு செய்ய வேண்டும்.
கரும்பு நடவு செய்த 30,60 மற்றும் 90 நாட்களில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவுப்படி உரத்தை பிரித்து இட வேண்டும். 5 மற்றும் 7ம் மாதங்களில் கரும்பில் சோகை உரிக்க வேண்டும். 7வது மாதத்தில் கரும்பிற்கு விட்டம் கட்ட வேண்டும். தேவைப்படும்போது பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அறுவடையின்போது கரும்பை அடியோடு வெட்ட வேண்டும். இம்முறைகளை பயன்படுத்தினால் அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம்.இவ்வாறு வெங்கிடசாமி பேசினார். ஏற்பாடுகளை கரும்பு உதவியாளர்கள் கண்ணன், பச்சையப்பன், ஜெயராமன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். கரும்பு பெருக்க உதவியாளர் வி.முத்துசாமி நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: தகவல்கள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...