விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

அதிக மகசூல் தரும் குருணை வடிவ யூரியா

குருணை வடிவ யூரியாவைப் பயிர்களுக்கு இடும்போது பயிர் பச்சை பிடிப்பது சிறிது காலதாமதம் ஆவதால் குருணை வடிவ யூரியாவை விட சாதாரண யூரியாவினையே அதிகளவில் விவசாயிகள் விரும்புகின்றனர். ஆனால் குருணை வடிவ யூரியாவில் தான் அதிக பலன் உள்ளது.

இரண்டு வகையான யூரியாவிலும் 46 சதவீதம் தான் தழைச்சத்து உள்ளது. ஆனால் குருணை வடிவ யூரியாவில் உள்ள தழைச்சத்து மிகவும் மெதுவாகவும், சீராகவும் நீண்ட நாள்களுக்கு பயிர்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும். இதனால் தழைச்சத்து பயன்படுத்தும் அளவு குறைகிறது. பயிர்களுக்கு இடும்போது தழைச்சத்து வீணாகாமல் பயிர்களுக்குக் கிடைக்கிறது.

நன்றி:தினமணி

யூரியா குருணை வடிவில் இருப்பதால் பயிர்களுக்குத் தெளிப்பது மிகவும் எளிதானது. இதில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் யூரியா கட்டியாவது இல்லை. திறந்து வைத்திருக்கும் நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாறுவதும் இல்லை.

குருணை வடிவ யூரியா சாதாரண யூரியாவைவிட எடை அதிகமாக இருப்பதால் பயிர்களுக்கு இடும்போது காற்று மற்றும் நீரினால் அடித்துச் செல்லப்படுவதில்லை.

ஆனால் சாதாரண யூரியா துகள்களாக இருப்பதால் இலையின் மேற்பரப்பில் படிந்து பயிர்களுக்கு சேதத்தை உண்டாக்குகிறது.

எனவே, அதிக பயன் உள்ள குருணை வடிவ யூரியாவைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும்படியும், விவசாயிகள் மண்பரிசோதனை பரிந்துரையின்படி பயிர்களுக்குத் தேவையான உரங்களை மட்டும் இட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மு.தெய்வேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...